சூடான செய்திகள் 1

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(25) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் பின்னர் தபால் திணைக்களம் தமது ஊழியர்கள் ஊடாக அவற்றை வாக்காளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தெற்கில் இன்புளுவன்சாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை