அரசியல்உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை

2025 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது, சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (27) அறிவித்துள்ளது.

2025 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

editor

கோதுமை மாவின் விலை உயர்வால் கிராமப்புற பேக்கரிகளுக்கு பூட்டு

சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்