வகைப்படுத்தப்படாத

உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் படுகாயம்

(UTV|JAPAN)-ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சப்போரோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

දහ අටට අඩු දරුවන් එක් ලක්ෂ 15,000 ක් මත් පැනට ලොල් වෙයි

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு

Several dead as gunmen storm Somali Hotel