உள்நாடுபிராந்தியம்

உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற நபர்!

கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபரொருவர் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இன்று புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்துள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சகோதரனை குத்திக் கொன்ற நபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை

editor

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் – பெண் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை

editor