அரசியல்உள்நாடு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி

editor