வகைப்படுத்தப்படாத

உக்ரைன் ஜனாதிபதியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரெசென்கோவின் உத்தியோக பூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ரஸ்யாவைச் சேர்ந்த குழுவினராலே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் பிரசித்தமான ரஸ்ய இணையத்தளங்கள் சிலவற்றை தடை செய்ய உக்ரைன் ஜனாதிபதி கடந்த தினம் தீமானித்தார்.

அதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த சைபர் தாக்குதலை ரஸ்யா மேற்கொண்டது என்பதற்கான எந்த சான்றும் இதுவரையில் இல்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சிரியாவில் 9 பேர் பலி

Ed Sheeran must wait to Get It On in Marvin Gaye copyright case

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதியை குறைக்க முடியாது