உலகம்

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க 28 நாடுகள் இணக்கம்

(UTV |  உக்ரைன்) – அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட 28 நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் தமது நாட்டுக்கு கிடைக்குமென உக்ரைன் ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் வந்துக்கொண்டிருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ஆதிக்கம் உக்ரைனுக்குள் அதிகரித்து வரும் நிலையில், 28 நாடுகளின் ஆயுதங்களை உக்ரைன் பெற்றுக்கொள்ளுமானால் மோதல் நிலை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மது விற்பனைக்கு தடை விதித்த தென்னாபிரிக்கா

உலகளவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா ஒழிப்பின் எதிர்பார்ப்பு சாத்தியமற்றது