உள்நாடு

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய முதற்தடவையாக உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இதன்படி 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய பிரஜைகள் மத்தள விமான நிலையத்தில் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விசேட திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகளை கருத்திற் கொண்டு நாட்டின் விமான நிலையங்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அநுர சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்