உலகம்

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை – ட்ரம்ப்

(UTV|அமெரிக்கா) – 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் 6 நாடுகள் மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அந்த நாடுகள் விலக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து, வெள்ளை மாளிகையில் விசேட அறிவிப்பை வெளியிட்டபோது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஏற்கனவே வெளியேறி விட்டதாகவும் ஈரானுக்கு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்

இந்தியா தேர்தலில்: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவு!

மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்