வகைப்படுத்தப்படாத

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே…

(UTV|IRAQ)-ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஜூலை 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஹாங்காங்கில் தானியங்கி மதுக்கடை

Unbeaten St. Benedict’s record fourth win

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை