வகைப்படுத்தப்படாத

ஈராக்கின் பல பகுதிகளில் 200 புதைகுழிகள்

(UTV|IRAQ)-ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த, ஈராக்கிய பகுதிகளில் உள்ள 200க்கும் அதிகமான புதைகுழிகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளமை ஐ.நாவின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதைகுழிகள் நினெவேஹ் (Nineveh), கிர்குக் (Kirkuk), சலாஹுதீன் (Salahuddin) மற்றும் அன்பர் (Anbar) ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த புதைகுழிகளில் 12,000க்கும் அதிக தடயங்கள் காணப்படலாம் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த புதைகுழிகளுக்குள், பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், வௌிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் உட்பட 6,000க்கும் 12,000க்கும் இடைப்பட்ட அளவிலான சடலங்கள் இருக்கலாம் என விசாரணையாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பு, அவர்களை ஏற்காத அனைவரையும் கொன்று குவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Ed Sheeran must wait to Get It On in Marvin Gaye copyright case

கடந்த 24 மணித்தியாலத்தில் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி

பிரபல நடிகருக்கு 5 ஆண்டு சிறை!!