உலகம்

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை – ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் – பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் இதாமன் பென் க்விர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“பள்ளிவாசல்களில் இருந்து கேட்கும் ஒலி இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்தேய நாடுகளும் சில அரபு நாடுகளும்கூட ஒலிபெருக்கி சத்தம் தொடர்பில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

ரொய்ட்டர் ஊடகவியலாளர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலால் கொல்லப்பட்டது உறுதி!