உலகம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த நபரை தூக்கிலிட்ட ஈரான்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் பல தசாப்தங்களில் மிகப்பெரிய மரணதண்டனைகளை நிறைவேற்றி வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூக்கிலிடப்பட்ட நபர் பஹ்மான் சூபியாஸ்ல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூபியாஸ்ல் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் அதிகாரிகளைச் சந்தித்ததாக ஈரான் குற்றம் சாட்டியது.

ஈரானின் மிசான் செய்தி நிறுவனம், சூபியாஸ்ல் “முக்கியமான தொலைத்தொடர்பு திட்டங்களில்” பணியாற்றியதாகவும், “மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான பாதைகள்” பற்றி செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜூன் மாதம் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு உளவு பார்த்ததற்காக ஒன்பது பேரை ஈரான் தூக்கிலிட்டதாக அறியப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்

மியான்மரில் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்வு

editor

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்