உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட ருஸ்தி சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த மாதம் 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஸ்தி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

Related posts

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்த பணிப்பு