உள்நாடு

இளைஞர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – கல்கிஸை கடலில் நீராடச் சென்றபோது காணாமல்போன இரு இளைஞர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கல்கிஸ்ஸை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்று(23) மாலை 4.30 மணியளவில் 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மொத்தமாக ஏழு பேர் நீராடச் சென்ற போது காணாமல்போன நிலையில், அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு காணாமல்போன இரு இளைஞர்களும் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

editor

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்