உள்நாடுபிராந்தியம்

இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மரணித்தவரின் உடல், நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!