உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலேவெல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர், இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

தமது பதவியை இராஜினாமா செய்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள்!

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு