உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 3 இலட்சத்தை கடந்த 22 கரட் தங்கம்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (8) 3 இலட்சத்தை கடந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை தரவுகளின் படி, இன்று ஒரேநாளில் மாத்திரம் மூன்று தடவைகள் தங்க விலை அதிகரித்துள்ளது.

நேற்று (07) 290,500 ரூபாவாக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 303,400 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று 314,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 328,000 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை – 22 கரட் ஒரு பவுன் – 296,000 | 24 கரட் ஒரு பவுன் -320,000

இன்று முற்பகல் – 22 கரட் ஒரு பவுன் – 299,700 | 24 கரட் ஒரு பவுன் – 324,000

இன்று பிற்பகல் – 22 கரட் ஒரு பவுன் -303,400 | 24 கரட் ஒரு பவுன் 328,000

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் இவ்வாறு தங்க விற்பனை விலை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

மற்றுமொரு மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் பாதிப்பு

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை

editor