உள்நாடு

இலங்கை வரலாற்றில் முதன் முறை 3,147 பேருக்கு தாதியர் நியமனம்

நாட்டின் தாதியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, எதிர்வரும் மே 24 சனிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இத்தனை பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகுமென, சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நிகழ்டன் இணைந்ததாக, தாதியர் சேவையில் பணியாற்றும் 79 விசேட தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இவ்விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

கொரோனா : 172 பேர் சிக்கினர்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு