உள்நாடு

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு

(UTV | கொழும்பு) – கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டுச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவை சபையுடன் இளைஞர் சேவை தனியார் நிறுவனமும் எதிர்வரும் 16 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

மொட்டு வேட்பாளராக நான் உள்ளேன்- டிலித்

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!