சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் நிதிச்சபை இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்யப்படும் கொள்கை வட்டி விகித அடிப்படை அலகுகளை 50 சதவீதத்தால் குறைக்க நேற்று (30) தீர்மானித்தது.

அதன்படி , நிலையான வைப்பு வசதி விகிதம் நூற்றுக்கு 7.5 சதவீதமாகவும் , நிலையான கடன் வசதி விகிதம் நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் காணப்படும்.

வணிக வங்கிகளினூடாக தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் கடன் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

அமைச்சுகளின் காரியாலயங்களுக்கு STF