வகைப்படுத்தப்படாத

இலங்கை தேசிய தரப்படுத்தல் விருதிற்காக விண்ணப்பங்கள் கோரல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இவ்வாண்டுக்கான இலங்கை தேசிய தரப்படுத்தல் விருதிற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உற்பத்திச் சேவை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் இதில் அடங்குகின்றன. பெரிய அளவிலான தொழில் முயற்சியாளர்களும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

விருது பெறுபவர்கள் ஆசிய பசிபிக் தரக்கட்டுப்பாட்டு விருது விழாவில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தையும் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புப் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

Low water pressure to affect several areas in Colombo

Panadura North OIC interdicted over missing T-56 riflesP

யுத்தம் குறித்த ஓர் கண்ணோட்டம்