வகைப்படுத்தப்படாத

இலங்கை கேந்திர நிலையமாக மாறுவதற்கு சீனா கைகொடுக்கும்…

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக இலங்கை மாற சீனா கைகொடுக்கும்…

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கால் ஆரம்பிக்கப்பட்ட “பட்டையும் பாதையும்” ​வேலைத்திட்டத்தின் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீன பிரதியமைச்சர் யேஜு, அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (02) சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவற்றுக்கிடையில் பல தசாப்த உறவு காணப்படுவதாகவும், அந்த உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Honduras fishing boat capsizes killing 26

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

மனித உரிமை உயிர்ஸ்தானிகர் அதிருப்தி