உள்நாடு

இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இணையவழி மெய்நிகர் முறைமையில், சற்றுமுன்னர் ஜெனிவாவில் இடம்பெற்றது. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.

இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல், என்ற தலைப்பிலான குறித்த பிரேரணை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]

சஜித் – அநுர அணியினரையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் கோரிக்கை