உள்நாடுவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அஷேன் பண்டாரவின் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருடன், வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

டொன் பிரியசாதின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பொலிஸார்!

Shafnee Ahamed

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு

ஏலக்காயின் கேள்வி