சூடான செய்திகள் 1

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கூட்டறிக்கை!

(UTV|COLOMBO) ஐரோப்பிய ஒன்றியம் அனைவருக்கும் சமமான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசாங்கம், தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது இது தொடர்பிலான தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது

அவசர கால சட்ட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டது

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்