உள்நாடு

இலங்கை அணுசக்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

42 ஆவது மரணமும் பதிவு

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்