வகைப்படுத்தப்படாத

இலங்கையை வைத்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தாக்குதல் முறியடிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய இராணுவத்தின் கணணிகளை இலக்கு வைத்து முயற்சிக்கப்பட்ட இணையத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவலாளர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரசித்த இராணுவக்கல்லூரியில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறி, இந்திய அரசாங்கத்தில் இருந்து அனுப்பப்படுவதை போன்று மின்னஞ்சல், குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.டி.ஜி.எம்.டி 16  என்ற புனைப்பெயரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலை அடுத்து அவை கிடைக்கப்பெற்ற சில இராணுவ அதிகாரிகள், இந்தியாவின் இணையக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மின்னஞ்சல் இணையத்தாக்குதலை இலக்காக கொண்டது என்ற அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மின்னஞ்சலை திறக்கவேண்டாம் என்ற அறிவுரை வழங்கப்பட்டது.

ஏற்கனவே இவ்வாறான இணையத்தாக்குதலை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவியலாளர்கள் பயன்படுத்தியமை காரணமாக இந்த இணையத்தாக்குதலுக்கு அவர்களே முயற்சித்திருக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு

Ton-up Bairstow stars as England book World Cup semi-final spot

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை