உள்நாடு

இலங்கையில் 15 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (23) தங்கத்தின் விலை 15,000 ரூபாய் குறைந்துள்ளது.

செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (22) 322,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23) 307,000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் (22) 350,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23) 335,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

தேர்தல் இப்போதைக்கு இல்லை : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபை

சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு