நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு இன்று (08) நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தற்கொலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.