உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

இன்று (24) கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று (23) இதன் விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ரூ. 2,000 இனால் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.

இதுவும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமையே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Related posts

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அஞ்சலி செலுத்தினார்

editor

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுக்கு – பிரதமர் விசேட உரை 

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் பிணையில் விடுவிப்பு

editor