உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக தங்க விலைக்கு இணையாக உள்நாட்டு தங்க விலையும் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி இது 327,500 ரூபாவாகக் காணப்பட்டது.

இதேவேளை, ஜனவரி 1 ஆம் திகதி 354,000 ரூபாவாக காணப்பட்ட “24 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றாகும் போது 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

புதிய நியமனங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம் : சிறுவர்கள் போசாக்கின்மையால் அவதி