உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

 

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

 

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மற்றும் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

 

இதற்கிடையில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சமாகவும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சமாகவும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

editor

மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்