உள்நாடுகாலநிலைவிசேட செய்திகள்

இலங்கையில் கடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடும் மழை, பலத்த காற்று மற்றும் பலத்த இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது

சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது