வணிகம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் “பாட்டா” உச்சிமாநாடு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் ‘பாட்டா’ என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

” எதிர்கால சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் இடர், தடை மற்றும் கண்டுபிடிப்பு ” என்பது இந்த வருட மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஜப்பான் உட்பட 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்