உள்நாடு

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – நாட்டின் இக்கட்டான பொருளாதார நிலையும் மக்களின் அமைதியின்மையினையும் கட்டுப்படுத்த நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானதாகவுள்ளதென தாம் அபிப்பிராயப்படுவதினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் தமக்குரியதாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு அந்தக் கட்டளைச் சட்டத்தின் பாகம் 2 இன் ஏற்பாடுகள் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வருதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்;

Related posts

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.