சூடான செய்திகள் 1

இலங்கையர் சென்னையில் மாயம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கையர் ஒருவர் சென்னையில் காணாமற் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

26 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவரே கடந்த மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞன் இலங்கையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில், பின்னர் தனது உறவினர்களை சந்திப்பதற்காக சென்னை நோக்கி சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த தனது மகன், உறவினர் வீட்டுக்கு சென்றடையவில்லை என அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞனை தேடி சென்னை விமான நிலைய பொலிஸார் சிசிரிவி கெமரா காட்சிகளை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம்

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு