சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

(UTV|COLOMBO) இலங்கை அரசாங்கத்திற்கு 10 காவல்துறை வாகனங்களை சீனா வழங்கியுள்ளது.இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சின்ஹுஆ செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்காக சீன தூதுவர் செங் ஸியுவானினால் நேற்றைய தினம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இந்த காவல்துறை வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் இந்த உதவிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சீன நிறுவனங்களுக்கு இலங்கை  காவல்துறையினரால் வழங்கப்படும் பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

ரணில் – சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…