விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – முன்னணி வீரர்கள் ஓய்வு

(UTV|COLOMBO) – இலங்கைக்கு எதிரான டி20 போட்டி தொடரில் இருந்து இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இலங்கை அணியுடன் 3 இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5 ஆம் திகதி கவுகாத்தியில் நடக்கிறது.

காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஷிகர் தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

Related posts

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

பாகிஸ்தான் அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்கள் நியமனம்