உள்நாடு

இலங்கைக்குள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது

இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வழக்கில் ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று (17) கொழும்பில் கைதுசெய்யப்பட்டு தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னதாக, ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவில் உள்ள ஒரு களஞ்சியசாலையிலிருந்து 8 சொகுசு பைக்குகள் மற்றும் 4 முச்சக்கர வண்டி வகை மோட்டார் சைக்கிள்கள் உட்பட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமாகும்.

Related posts

நாமலுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்