சூடான செய்திகள் 1

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்

(UTV|COLOMBO) இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் 24ம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்தே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு