உள்நாடுபிராந்தியம்

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்து – கணவன், மனைவி பலி

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல – பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த மற்றொரு லொறியின் பின்புறத்தில் சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (11) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும், வைத்தியசாலை சந்திப்பில் உள்ள ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் என்று பொலிசார் ​தெரிவித்தனர்.

கொங்கஹவெல பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பிறகு, சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி லொறியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல் !

வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவப் படையினர்!

கோபா குழுவின் முதல் கூட்டம் புதனன்று