அரசியல்உள்நாடு

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான் அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காம பிரதேச செயலகத்தில் இன்று (15.10.2025) நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாரளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், இறக்காம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். முஸ்மி, இறக்காம பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்ஸார், இறக்காமம் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ,உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல முக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

-கே எ ஹமீட்

Related posts

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய குடும்பம் – பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிரடி நடவடிக்கையால் உயிருடன் மீட்பு

editor

கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!