உள்நாடு

இரு பஸ்கள் மோதியதில் இருவர் பலி – 40 பேர் காயம்!

ஹபரணை-பொலன்னறுவை பிரதான விதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த்துடன் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்புக்கும் கதுருவெலவுக்கும் இடையில் பயணித்த இரண்டு தனியார் பஸ்களே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

அரசிற்கு மற்றுமொரு சவாலாக தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு [VIDEO]