சூடான செய்திகள் 1

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் காயம்..

(UTV|COLOMBO) – ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பிரதேசத்தில், இன்று (12) நண்பகல் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 50 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸும் தெஹியத்தகண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ்ஸுமே, இவ்வாறு ​மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், குறித்த இரு பஸ்களின் சாரதிகள் உட்பட 50 பேர் காயமடைந்த நிலையில், லுனுகம்வெஹர, தெம்பரவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் சேவைகளில் காலதாமதம்…

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்