உள்நாடு

இரு பயணிகள் உயிரிழப்பு; கட்டுநாயக்கவில் தரையிரக்கம்

(UTVNEWS | COLOMBO) – இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்தோனிசியா விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது.

இவ் விமானத்திலிருந்து நோய்வாய்ப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக இறக்கப்பட்டது.

சவுதி அரேபியாவிலிருந்து 285 பயணிகளுடன் இந்தோனேசியாவை நோக்கி சென்ற லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றே இன்று (13) திங்கட்கிழமை அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இவ்விரு சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சிறிய தவறு கூட பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கலாம் – கெஹலிய ரம்புக்வெல்ல.

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு