வகைப்படுத்தப்படாத

இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் மாயம்..

(UDHAYAM, COLOMBO) – தமன – ஹெலகம்புர பகுதியிலுள்ள ஆறொன்றின் வடிகானில், நீராடிக்கொண்டிருந்த பிள்ளைகளுள் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 16 வயதுடைய பெண் ஒருவரே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திம்புலபத்தன பகுதியில் கொத்மலை ஓயவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

පාර්ලිමේන්තු ප්‍රහාරයක් පිලිබඳ අසත්‍ය තොරතුරු දුන් පුද්ගලයෙකු අත්අඩංගුවට

Premier summoned before PSC

சசிகலாவிடம் விசாரணை ஆரம்பம்!