சூடான செய்திகள் 1

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது

(UTV|COLOMBO) இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா – 1 விண்வெளியில் சற்று முன்னர் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இராவணா – 1 என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குறித்த செய்மதி, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மதூஷின் தந்தை பலி…

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

புதிய களனி பாலத்திற்கு பூட்டு