வகைப்படுத்தப்படாத

இராஜங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-இராஜங்க அமைச்சர் ஏ .எச் .எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் இடமபெறும் வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் சென்றுள்ளதாக அமைச்சரின் சட்டத்தரணி கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்க பண்டாரவுக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து குறித்த வழக்கு இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

அரச வாகனமொன்றை தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக இராஜாங்க அமைச்சருக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Rains expected in several areas today

நாளை மழை அதிகரிக்கும்

Police investigate death of ten-month old twins