உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வைத்தியசாலையில் இன்று (02) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக முன்னர் இணங்கிய போதிலும், அதிகாரிகள் அதனை செயல்படுத்தத் தவறியுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் வழமைபோல் இடம்பெறும் என்பதுடன், ஏனைய நாளாந்த சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க, தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

ஒட்சிசன் கொள்வனவை இடைநிறுத்த அரசு உத்தரவு

சபாநாயகரின் கோரிக்கை